சட்டி சுட்டது’ உறவுகளைப் பற்றியது. பாசம் மிக்க தந்தை தன் பிள்ளைகளால் பாதிக்கப்படும் அவலத்தை நாவல் பேசுகிறது. 1965இல் எழுதப்பட்டிருந்தாலும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட நிகழ்வுகளை மையமிட்டது நாவல். ஒவ்வொரு உறவும் தன்னிடமிருந்து விலகிப் போகும்போது மௌனமாக அதைச் சகித்து ஏற்றுக்கொள்ளும் சாமிக்கவுண்டர், இந்நாவலின் மையப் பாத்திரம்.