அறுபதுகளின் இறுதியிலிருந்து ஒரு மூன்றாண்டுகள் ஒரு அட்வகேட்டிடம் வக்கீல் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தபோது நீதித் துறையுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பல்வேறுவிதமான மனிதர்கள், வழக்குக் கட்டுகள், நீதிமன்ற வளாகங்கள், கட்சிக்-காரர்கள் என அந்த மூன்று ஆண்டுகள் கழிந்தன. ஒவ்வொரு கட்சிக்காரரிடமும் ஒரு கதை இருந்தது. அவற்றையெல்லாம் எழுத இந்த ஆயுள் போதாது. 

இந்த நாவலுக்கு கருப்புக் கோட்டு என்ற தலைப்பை வைக்கத்தான் முதலில் உத்தேசித்திருந்தேன். ஆனால், வேறு சில காரணங்களுக்காக காலம் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுக்கும்படி ஆயிற்று.

- வண்ணநிலவன்