அழகிய பெரியவனின் அரசியல் நம்பிக்கையும் கலை நம்பிக்கையும் ஒன்றோடொன்று முயங்கி, ஒன்றுக்கொன்று அனுசரணையாக அமைந்திருக்கும் ஒரு பெறுமதியான உறவில் இவருடைய கதைகள் உருவாகியிருக்கின்றன. கதையுலகின் உள்ளார்ந்த தீவிரத்திலும் கதையாடலின் உயரிய கலை எழுச்சியிலும் உயிர்கொண்டிருக்கும் கதைகள் இவை. நம் மண்டையோட்டைப் பிளக்கும் கதை உலகமானது, படைப்பு மந்திரத்தின் கதகதப்பில் உருப்பெற்றிருக்கிறது.  இன்றைய தமிழ்க்கதைப் பரப்பில் அழகிய பெரியவன் தனித்துவமும் ஆற்றலும் கூடிய ஒரு சக்தி. தன் காலத்தோடும் வரலாற்றோடும் தன் கலை மொழியினூடாக அழகிய பெரியவன் வலுவான, தீர்க்கமான உறவு கொண்டிருப்பதன் அடையாளம் இத்தொகுப்பு.

- சி. மோகன்