இந்நூலில் ஆயுர்வேதத்தைப் பற்றிய அடிப்படை விளக்கங்கள்  மூல தத்துவங்களை இழக்காமல் எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது.
இதன் இரண்டாவது பகுதியில் இன்று மிகப் பிரபலமாக இருக்கின்ற பஞ்சகர்மா என்று சொல்லப்படும் உடலை சுத்தி செய்கின்ற சிகிச்சைகளைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தப் புத்தகமானது ஆயுர்வேதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு இந்தச் சிகிச்சைகள் எதைச் சார்ந்து இருக்கின்றன என்ற அறிவையும் தருகிறது. அதே சமயம் மாற்று முறை மருத்துவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் அமைகிறது.