இக்கட்டுரைகளை எழுத அமர்ந்தபோது ஊர்நினைவுகள் பனிமூட்டமெனப் பெருகி என்னைச் சூழ்ந்துகொண்டன. இப்போது ஊர் என்னிடம் மேலும் பிரியம் கொண்டுவிட்டது. இவற்றை எழுதிக் கொண்டிருந்தபோது ஊரைப்பற்றியும் ஊரிலிருந்த மனிதர்களைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்ளாமல் விட்டது எவ்வளவோ என்ற மலைப்பு உருவானது. ஊரைப் பற்றி அறிந்துகொள்ளாதது நம் பெற்றோர் குறித்தும் மூதாதையர் குறித்தும் அறிந்துகொள்ளாததைப் போன்றது என்பேன்.

இக்கட்டுரைகளைப் படிக்கிறவர்களுக்கு அவரவரது சொந்த ஊரைப் பற்றிய ஞாபகங்கள் உயிர்பெற்றால், அதுவே என் மகிழ்ச்சி.

- அழகிய பெரியவன்